திருவொற்றியூர்.

எர்ணாவூர், சுனாமி குடியிருப்பில், ரேஷன் அரிசிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, எண்ணூர் போலீசாருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில், காவலர்கள் கலைவாணன், ராபின் ஜோஸ் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுனாமி குடியிருப்பு, 17 வது பிளாக் பின்புறம் 10 மூட்டைகளில் 500 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பட்ரவாக்கம் உணவு வழங்கல் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த பத்மாவதி என்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *