கோவையில் தனிஷ்க் ‘ரிவா’ திருமண நகைக் கண்காட்சி தொடக்கம்–5,000 சதுர அடி பரப்பளவில் மணப்பெண்களுக்கான பாரம்பரிய மற்றும் நவீன நகை வடிவமைப்புகள் பார்வையாளர்கள் கவனம் ஈர்ப்பு
தங்கம் மற்றும் வகர நகைகள் விற்பனையில் இந்திய அளவில் முன்னனி நிறுவமான தனிஷ்க் நிறுவனத்தின் ‘ரிவா’ திருமண நகைக் கண்காட்சி தாஜ் விவாந்தா நட்சத்திர ஓட்டல் அரங்கில் தொடங்கியது.
அக்டோபர் 10 ந்தேதி துவங்கி 12 ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் திருமண மரபுகள் மற்றும் சடங்குகளுக்கு ஏற்ற மணப்பெண்களுக்கான பிரத்யேக நகைத் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.
பாரம்பரிய தங்க நகைகள், குந்தன் நகைகள், போல்கி நகைகள், நவரத்தினங்கள் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோயில் வடிவமைப்புகள், மலர்கள், மயில் உருவங்கள் மற்றும் நுணுக்கமான கைவினை வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட நகைகள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
மேலும், மணப்பெண்களுக்கான கழுத்தணிகள், அடுக்கு ஆரங்கள், வளையல்கள், நெற்றிச்சுட்டி, மாதா பட்டி உள்ளிட்ட பாரம்பரிய அணிகலன்களுடன், நவீன வடிவமைப்பிலான ஆபரணங்களும் இடம்பெற்றுள்ளன.
திருமணத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்ற வகையில், தங்களது விருப்பத்திற்கும் ரசனைக்கும் ஏற்ப நகைகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்குகிறது.
இதுகுறித்து தனிஷ்க் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டார வணிக மேலாளர் டி. சந்திரசேகர் கூறுகையில், “தமிழ்நாட்டின் திருமண மரபுகள் பாரம்பரியம் மற்றும் கைவினைத் திறனுடன் நெருங்கிய தொடர்புடையவை. இந்த மரபுகளைக் கொண்டாடும் வகையிலும், இன்றைய மணப்பெண்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையிலும் ரிவா திருமண நகைக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்குத் தேவையான பல்வேறு வகையான நகைகளை ஒரே இடத்தில் பார்வையிட்டு தேர்வு செய்யும் வாய்ப்பை மணப்பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்குகிறோம்” என்றார்.
தனிஷ்க் நிறுவனத்தின் தமிழ்நாடு நகைத் தயாரிப்பு பிரிவு சார்ந்த சந்தோஷ் ஈ.ஏ.எஸ். கூறுகையில், கோவை வாடிக்கையாளர்கள் தங்களது திருமணத்திற்குத் தேவையான நகைகளை எளிதாகத் தேர்வு செய்யும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பாரம்பரிய நகைகள் முதல் நவீன வடிவமைப்புகள் வரையிலான பல்வேறு ஆபரணங்கள் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
கண்காட்சிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டம் உள்ளிட்ட சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் 67 விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வரும் தனிஷ்க் நிறுவனம், திருமண நகைகளுக்கான தனது பிரத்யேகத் தொகுப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழகத்தில் முதல் முறையாக இந்தக் கண்காட்சியை நடத்துவது குறிப்பிடதக்கது..
