கோவையில் அதித்யா ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது: 100 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி ஸ்ரீ ராமசந்திரா மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் கே. பாலாஜி சிங் சிறப்புரை!
கோவை அதித்யா ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதாரம் மற்றும் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மொத்தம் 100 மாணவ-மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இம்மாபெரும் விழாவிற்கு ஸ்ரீ ராமசந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் டாக்டர் கே. பாலாஜி சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதித்யா கல்வி குழுமத்தின் தலைவர் சுகுமாரன் மற்றும் மேலாண்மை அறங்காவலர் டாக்டர் ஸ்ரீநிதி பிரவீன் குமார் ஆகியோர் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில், மேலாண்மை அறங்காவலர் பிரவீன் குமார், அதித்யா ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டின் டீன் திருமதி தீபா சண்முகம் மற்றும் கோவையின் முன்னணி மூத்த மருத்துவர்கள் பலரும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
பட்டமளிப்பு விழாவானது கல்லூரி நிர்வாகத்திற்கும், பட்டம் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு பெருமிதமான தருணமாக அமைந்ததோடு, மாணவர்களின் உழைப்பையும் சாதனையையும் அங்கீகரித்து, சுகாதாரத் துறையில் அவர்களின் புதிய தொழில்முறை வாழ்க்கைக்கு ஒரு சிறந்த தொடக்கமாகவும் அமைந்தது.
