கோவை:
​ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ஆம் தேதி உலக மனநல தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 1992-ஆம் ஆண்டு World Federation for Mental Health (WFMH) அமைப்பால் தொடங்கப்பட்ட இந்நாள், உலகம் முழுவதும் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனநலப் பிரச்சனைகளுடன் வாழ்பவர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


​இந்த ஆண்டிற்கான (2026) உலக மனநல தினக் கருப்பொருள் “Lived Experiences Heard, Real Voices, Real Changes” (வாழ்ந்த அனுபவங்கள் கேட்கப்படட்டும்; உண்மையான குரல்கள், உண்மையான மாற்றம்) என்பதாகும். இது குறித்து கோவையின் பாலாஜி மூளை, நரம்பியல் மற்றும் மனநல மருத்துவ மையத்தின் பிரபல மனநல மருத்துவர் Dr. N. S. மணி அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


​”மனநலம் என்பது வெறும் மனநோய் இல்லாமல்ிருப்பது மட்டுமல்ல; ஒரு மனிதன் தனது உணர்வுகளைப் புரிந்து, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு, சமூகத்துடன் இணக்கமாக வாழ்வதே முழுமையான மனநலமாகும். உடல்நலத்திற்கு இணை இணையான முக்கியத்துவத்தை மனநலத்திற்கும் நாம் வழங்க வேண்டும்.


​இன்றைய சூழலில் மனச்சோர்வு, பதற்றம், போதைப்பழக்கம் அல்லது மனநலப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்தவர்களின் ‘வாழ்ந்த அனுபவ அறிவும்’ அவர்களின் உண்மையான குரலும் மிகவும் மதிப்பிற்குரியவை. மருத்துவப் புத்தக அறிவைக் காட்டிலும் அவர்களின் நேரடி அனுபவங்களைக் கேட்டுப் புரிந்துகொள்வது உண்மையான மாற்றத்திற்கு வழிவகுக்கும். சிகிச்சை பெறுபவர்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காமல், அவர்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் மதிப்பளிப்பது அவசியமாகும்.


​குறிப்பாக, கல்வி அழுத்தம், வேலைவாய்ப்பு நிச்சயமின்மை, சமூக ஊடகப் செல்வாக்கு மற்றும் எதிர்காலம் பற்றிய பயத்தால் பாதிக்கப்படும் இன்றைய இளைஞர்களின் குரல்களைக் கேட்டு, அவர்களுக்குத் தேவையான மனநல ஆதரவைச் சமூகம் வழங்க வேண்டும். மனநலப் பிரச்சனைகள் நபருக்கு நபர், சூழலுக்குச் சூழல் மாறுபடும் என்பதால் ‘ஒரே தீர்வு அனைவருக்கும் பொருந்தாது’.


​எனவே, மனநல உதவியை நாடுவது இயல்பான ஒன்றாகக் கருதப்படும் சூழலை உருவாக்க அரசு, கல்வி நிறுவனங்கள், மருத்துவ வல்லுநர்கள், காவல்துறை மற்றும் குடும்பங்கள் இணைந்து செயல்பட வேண்டும். இந்த உலக மனநல தினத்தில், மனநலச் சிக்கல்களை எதிர்கொண்டவர்களின் குரல்களுக்குச் செவிசாய்த்து, அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாத்து, உண்மையான மாற்றத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்” என்று மருத்துவர் Dr. N. S. மணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *