ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வித்தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படும் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை சேவை மனப்பான்மைக்காகவே உருவாக்கிய மாமனிதர் கல்வி தந்தை டாக்டர் இ.எம். அப்துல்லா நூற்றாண்டு விழா செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
டாக்டர் இ எம் அப்துல்லா நூற்றாண்டு விழாவில் செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா வரவேற்புரை ஆற்றினார். விழாவில் கல்வித்தந்தை டாக்டர் இ எம் அப்துல்லா வாழ்க்கை வரலாறு குறித்து குறும்படம் வெளியிடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மூத்த டாக்டர் அரவிந்தராஜ் விழாவில் கௌரவிக்கப்பட்டார். திரைப்பட நடிகர் செந்தில் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சாலிகு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா சிறப்புரை ஆற்றினர்.
அதனைத் தொடர்ந்து சொல்வேந்தர் கலை மாமணி சுகிசிவம் தலைமையில் இன்றைய சூழலில் இளைஞர்களின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருப்பது வீடா? நாடா? பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் பிரபல பேச்சாளர்கள் பேராசிரியர் பர்வீன் சுல்தானா, புலவர் ராமலிங்கம், பேராசிரியர் கோவை சாந்தாமணி, முனைவர் நீலகண்டன் ஆகியோர் பேசினர். விழாவில் முக்கிய நிகழ்வாக கல்வித்தந்தை டாக்டர் இ எம் அப்துல்லா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அய்யாவின் நினைவுகள் குறித்து அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் பாபு அப்துல்லா டாக்டர் செய்யதா அப்துல்லா, டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் கல்வி தந்தையின் நினைவுகள் குறித்து தங்கள் அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசினர். விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு டாக்டர் இ எம் அப்துல்லா நினைவு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் செய்யதா அப்துல்லா, கலைக் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, அபிதா தஸ்னிம், டாக்டர் ஷிபா பாபு, டாக்டர் பாரூக் அப்துல்லா, டாக்டர் பாத்திமா ஷானாஸ், டாக்டர் ராஷிகா, டாக்டர் அகிலா, டாக்டர் ஹாரிஸ் அப்துல்லா, டாக்டர் எஜஷ் அப்துல்லா, டாக்டர் அத்தீப் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர் ஆசிரியைகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். ராமநாதபுரம் நகரே நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
