துறையூரில் துணை சபாநாயகர் ரவிசங்கர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
துறையூர் அக்-09
திருச்சி மாவட்டம் துறையூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளதை தொடர்ந்து துறையூர் எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தலைமையில் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டனர்.இதில் மாவட்ட இணை செயலாளர் பா.மதன், நகர செயலாளர்கள் வினோத்குமார் (தெ), சூர்யா (வ), ஒன்றிய செயலாளர்கள் தர்மா (கி), ரவிச்சந்திரன் (வ), சுதாகர் (தெ),
சிவப்பிரகாசம் (மே), உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த் (தெ), குணசேகரன் (வ), சண்முகம் (ம), பேரூர் கழக செயலாளர்கள்
முத்துகிருஷ்ணன் (உப்பிலியபுரம்), கண்ணன் (எ)கிருஷ்ண மூர்த்தி (பாலகிருஷ்ணம்பட்டி) மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
