தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்,
தஞ்சாவூர், அக்- 7. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகில் மத்திய அரசின் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு 0.04 சதவீதம் வரி விதிப்பை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு யுபிஐ பண பரிவர்த்தனைக்கு 0.04 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட செயலாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் புண்ணியமூர்த்தி சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் பாலாஜி வரவேற்புரையாற்றினார்.
யுபிஐ பண பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்பட்டதை கண்டித்தும், உடனடியாக இந்த நடைமுறையை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ராஜகிரி வணிகர் சங்க தலைவர் அண்ணாதுரை, தஞ்சை புதிய பஸ் நிலைய சங்கத் தலைவர் மருது, நகைக்கடை சங்க செயலாளர் ராஜா, அடகுக்கடை சங்க செயலாளர் மகேஷ், வணிகர் சங்க பேரவை மாவட்ட துணைத் தலைவர் கபார்கான், நகர செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரத் தலைவர் கந்த முருகன் நன்றி கூறினார்.
