மன்னார்குடி., ஆக21
நியாய விலைக்கடைகளில் கடந்த 10 தினங்களாக இணையதள சேவை முடக்கம் ஏற்பட்டுள்ளது ,இதனால் நியாய விலைக் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளால் பொதுமக்கள் ரேஷன் பொருட்களான அரிசி , கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்க பொதுமக்கள் நீண்ட நேரமாக வெயிலில் குழந்தைகளை வைத்துக்கொண்டு காத்திருக்கின்றனர் .
இதனால் விற்பனையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து வீண் வாக்குவாதங்கள் கைகலப்புகள் ஏற்படுகின்ற சூழ்நிலை உருவாகி வருவதாக கூறி பலமுறை அதிகாரிகள் முறையிட்டும் நேரடியாக சந்தித்தும் எந்த தீர்வும் எட்டப்படாத நிலை உருவாகியுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடை ஊழியர்கள் விற்பனை முனையத்தை வட்ட வழங்கல் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் அரசு நியாய விலைக்கடையில் இணையதள சேவை முடக்கம் ஏற்பட்டுள்ளதால் நியாய கடை ஊழியர்கள் தமிழக அரசு வழங்கியுள்ள விற்பனை முனையத்தை வட்ட வழங்கல் துறை அதிகாரியிடம் திருப்பி ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
