தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக அதிகபட்சமாக சீர்காலையில் கனமழைவு என்பது ஒவ்வொரு வருடமும் பெய்து வருகிறது

இதனால் இந்த சீர்காழி கடைமடை பகுதியில் விவசாயம் செய்யப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளுக்கு தொடர் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர் சீர்காழி ,கொள்ளிடம், மாதானம், செருகுடி, கார்குடி, திருமுல்லவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு காப்பீட்டு தொகை இந்தாண்டும் வழங்கப்படவில்லை விவசாயிகள் காப்பீட்டு தொகை முழுவதும் கட்டியும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தை மட்டும் சந்தித்து வருகின்றனர்

காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டும் முழுமையான இழப்பீடு வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் தொடர்ந்து விவசாயத்தை செய்ய முடியாத சூழ்நிலையில் விவசாயிகளில் தள்ளப்பட்டுள்ளனர் காப்பீட்டு நிறுவனங்கள் சீர்காழி பகுதியில் முழுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டும் பாரபட்சத்துடன் புள்ளியல் துறை அதிகாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு இந்நிலையில் சீர்காழி பகுதியில் ஆய்வு செய்து வந்த உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனிடம் காப்பீட்டு தொகை பெற்றுத் தரக் கோரி மாதானம் பகுதி விவசாயிகள் காப்பீடு தொகையை பெற்று தர கோரிக்கை மனு அளித்தனர்

அதை தொடர்ந்து அமைச்சர் எருக்கூர் அரசு நவீன அரிசி ஆலை பராமரிப்பு இல்லாத கிடக்கும் நவீன அரிசி அரவை இயந்திரங்கள் ரூபாய் 65 கோடியில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லை அரைக்கும் இயந்திரம் பராமரிப்பு இல்லாமல் கிடப்பதை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

மேலும் அந்த நவீன அரிசி ஆலையில் 18 ஆண்டாக வேலை பார்க்கும் தொழிலாளருக்கு உரிய சம்பளம் கிடைக்காததால் அவர்களும் கோரிக்கை மனு அளித்தனர் அமைச்சர் விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *