வாடிப்பட்டி, ஜூன்.5-

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம்
தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் குரும்பன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் தீபா முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியர் ஞானமணி வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பள்ளி சீருடை, காலனி, நோட்டு, புத்தகம், பேனா, பை, ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரண பொருட்கள் வழங்கினார்.


இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் விஜய்ஹரிஷ்,கிருஷ்ணமூர்த்தி,வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தாமு,
வடக்கு ஒன்றிய நிர்வாகி கார்த்திக்,இணைச்செயலாளர்முத்து,பேரூர் செயலாளர்புகழ், மற்றும் நிர்வாகிகள் தியாகு, ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சியை தமிழாசிரியர் கவிதா தொகுத்து வழங்கினார்.முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *