நாகப்பட்டினம்,ஜூன்.5-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 12 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் எதிரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமருகல் ஒன்றியம் புத்தகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளர், முன்னாள் மாநில கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் எஸ்.ஆசைமணி தலைமை தாங்கினார்.

இதில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றி விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

அதேபோல் திருமருகலில் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், நரிமணத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி தலைமையிலும், திட்டச்சேரியில் நகர செயலாளர் அப்துல் பாசித் தலைமையிலும், ஆலங்குடிச்சேரியில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயந்தி சாமிநாதன் தலைமையிலும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *