கல்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சியில் 9 கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன இந்த அமைப்பின் சார்பில் கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.பி. சகாதேவனுக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது அதில் கூறியிருப்பதாவது கூவத்தூர் கிராமத்தில் 9 கிறிஸ்தவ ஆலயங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆலயங்களுக்கு கூவத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வாரம் 3 நாட்கள் வந்து வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.இந்த ஆலயங்களுக்கு வரும் மக்கள் உரிய சாலை வசதி குடிநீர் கழிவறை தெரு மின் விளக்கு (IMASS)வசதியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் இந்த பகுதியில் கிறிஸ்தவ கல்லறைகள் சுற்றுச் சுவர் இல்லாமல் உள்ளது.

கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ள இடங்களில் பாம்புகள் உட்பட விசப் பூச்சிகள் அதிகம் உள்ளதால் அச்சத்துடன் உள்ளனர் எனவே இந்த பகுதியில் உரிய மின் விளக்குகள் அமைத்தும் குடிநீர் சாலை வசதிகள் ஏற்படுத்தியும் தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர் மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் கே.பி. சகாதேவன் மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *