அருள்மிகு சீதளா தேவி மாரியம்மன் வைகாசி பெரும் திருவிழா.. பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பிறக்க முக்தி தரும் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் வடமேற்கில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த காகிதக் காரத்தெரு அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தின் வைகாசி மாச பெருந் திருவிழா நடைபெற்று வருகிறது..


கடந்த 24/5/2026 விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய வைகாசி திருவிழா கேடய உற்சவம் நடைபெற்று சேஷ வாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம் ஆகியவற்றில் சீதளாதேவி மாரியம்மன் எழுந்தருளு செய்து ஒவ்வொரு இரவும் திருவாரூர் பகுதி முழுதும் வீதி உலா வந்தது.


தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது..இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கமலாலயம் குளத்திலிருந்து பால் குடம் ஏந்தி 4 வீதிகளையும் வலம் வந்து சீதளா தேவி மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அம்மனுக்கு பால் அபிஷேகம் இன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெறும் திருவிழாவின் தொடர்ச்சியாக நாளை தீமிதி காட்சியும் தொடர்ந்து அம்மன் புஷ்ப பல்லக்கு வீதி உலா காட்சியும் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *