கல்பாக்கம் மே 31
செங்கல்பட்டு மாவட்டம், கழிப்பட்டூர், பழைய மகாபலிபுரம் சாலை,கலசலிங்கம் நகரில் அமைந்துள்ள ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜி கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழா நேற்று 30 ஆம் தேதி மிக சிறப்பாக நடைபெற்றது.


இந்த விழாவில் கல்லூரி செயலாளர் டாக்டர் எஸ் அறிவழகி ஸ்ரீதரன் தலைமை தாங்கினார் முதன்மை நிருவாக அலுவலர் டாக்டர் சஷி ஆனந்த் ஸ்ரீதரன் ஆலோசகர் டாக்டர் கே. ராஜு மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் கே. கர்ணவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கேரள மாநில அரசின் கேரள மாநில இன்பர்மேசன் டெக்னாலஜி உட்கட்டமைப்பு நிறுவனம் மற்றும் கேரள ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் நிறுவனத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மேலாண் இயக்குநர் டாக்டர் சந்தோஷ் பாபு, கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் 400-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்


நிகழ்ச்சியில் ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜியின்
அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.