திருவெற்றியூர் சத்தியமூர்த்தி நகர் உட்பட்ட ஜோதி நகர் முருகப்பா நகர் கார்கில் நகர் வி பி நகர் பகுதிகளில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவதி

சென்னை எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பகுதியில் தினமும் பகல் மற்றும் இரவு வேளையில் அடிக்கடி மின்வெட்டு தொடர்ந்து வந்த நிலையில் இரவு நேரங்களிலும் நீடிக்கு மின்வெட்டால் பொதுமக்கள் வேதனைக்கு ஆளாகி வருகின்றனர்

எண்ணூர் நேரு நகர் பகுதிகளில் இரவு நேரத்தில் இரண்டு மணி நேரமாக மின்வெட்டு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டனர் ஆனால் மின்வாரிய ஊழியர்கள் தொடர்பு கொள்ள முடியாமல் நிலை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தவெ க எம் எல் ஏ செந்தில்குமார் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தீர்களா என்று கேட்டு

மின்வாரிய அலுவலகத்திற்கு எம் எல் ஏ செந்தில்குமார் நேரடியாக சென்று மின்வாரிய ஊழியர்களை வரவழைத்து மின்வெட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்

திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட இதேபோன்று சத்தியமூர்த்தி நகர் ஜோதி நகர் முருகப்பா நகர் கார்கில் நகர் வி பி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டது அடுத்து முதியோர்கள் பெண்கள் குழந்தைகள் அவதி அடைந்தனர் தினெடுத்து மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லாததால் மிகுந்த மனவேதனை அடைந்தனர் புகார் தெரிவிக்கவே ஆட்கள் இல்லாத மின்வாரிய அலுவலகம் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *