சென்னை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது

“தியாகமும், ஈகையும், மனிதநேயமும் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்!”

​இறைவனின் தூதரான இப்ராகிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களால் நல்வழியில் கொண்டாடப்படும் புனிதமான திருநாள் பக்ரீத் திருநாள்.

நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களுக்கு வழங்கி மகிழும் கொடை உள்ளம் பெருகட்டும்.

மதம், இனம் கடந்து மனிதநேயமும், ஒற்றுமையும் நம் சமூகத்தில் என்றும் நிலைத்திருக்கட்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பும், அமைதியும், மகளிர் மற்றும் குழந்தைகளின் வாழ்வில் வளம் மற்றும் பாதுகாப்பும் பெருகிட இறைவனை வேண்டுகிறேன்.

​நம் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சமூக நீதியும், சமத்துவமும் தழைத்தோங்கும் இந்த நன்னாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பக்ரீத் நல்வாழ்த்துகளைக் கனிவோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்