இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின்
முப்பத்தி நான்காம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு முனைவர் ப. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கேத்தரின் ஆரோக்கியசாமி, எம்.ஆர்.எஸ். கேசவன், இரா. பூங்குழலி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பொன்மலை ரயில்வே பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரும், எழுத்தாளருமான நொச்சியம் ச. சண்முகநாதனுக்கு தமிழ்மாமணி விருதும், பெங்களூர் எழுத்தாளர் மீனாட்சி பால கணேஷுக்கு தமிழ் பாரதி விருதும், கௌரா பதிப்பகக் குழுமத்தைச் சேர்ந்த ஜெய்கணேஷுக்கு செந்தமிழ்க்கொண்டல் திருஆ னைக்கா பி.ரவி நினைவு விருதும், தண்டலை நல்லோர் வட்ட நிறுவனர் து. சப்தரிசிக்கு சிறந்த தமிழ் அமைப்புக்கான விருதும் வழங் கப்பட்டது.

விருதுகளை திருச்சிராப்பள் ளித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் ம. செந்தில்வேல், சங்கத்தின் அமைச்சர் பெ. உத யகுமார் ஆகியோர் வழங்கினர். முன்னதாக செண்பகத் தமிழ் அரங்கின் நிர்வாகி இராச. இளங் கோவன் வரவேற்க. நிறைவாக சு. செயலாபதி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *