“இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நேற்று இரவு முதல் எனக்கு தூக்கமே இல்லை. அந்த குழந்தை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தாலே மனம் பதறுகிறது.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். அந்த தண்டனையை பார்த்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு அச்சம் ஏற்பட வேண்டும்.சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண உதவி, அரசு வேலை மற்றும் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும்.மேலும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த தமிழக காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.
