திருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தவெக கட்சியை சேர்ந்த ரவிசங்கர் , தமிழக வெற்றி கழகத்தின் தலைவரரும்,தமிழக முதல்வருமான சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக சட்டப்பேரவையில் சட்டப்பேரவை துணை சபா நாயகராக பொறுப்பு வழங்கி துறையூர் தொகுதியை சிறப்பு வாய்ந்த தொகுதியாக மாற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாலை டைம்ஸ் இணையதள செய்தியாளர் வெ.நாகராஜீ துணை சபாநாயகர் ரவிசங்கரை துறையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து,தமிழக முதலமைச்சருக்கும், துணை சபாநாயகராக பொறுப்பேற்ற நாளிலிருந்து பரபரப்பாக மக்கள் பணியாற்றி வரும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் என வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் மாவட்ட துணை செயலாளர் மதன், நகர செயலாளர்கள் வினோத், சூர்யா, அடிவாரம் நாகராஜ், வழக்கறிஞர் செல்லதுரை மற்றும் பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *