தமிழக வெற்றி கழகம் சார்பில் கரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோன்றிமலை,ராயனூர், பசுபதிபாளையம்,காந்திகிராமம்,சர்ச்கார்னர் என பல இடங்களில் கோடை காலத்தின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக ராயனூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கரூர் தெற்கு நகர மேற்கு இணை செயலாளர் பி.சமரன் தலைமையில் பொது மக்களுக்கான நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றி கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கலந்து கொண்டு துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி என குளிபானங்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளரை கட்சியின் நகர,வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பொன்னாடை,மாலை என அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர்.இதில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *