திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,

கொரடாச்சேரி அருகே வாழச்சேரி பகுதியில் அமைந்துள்ள
மதர் இந்தியா மேல்நிலைப்பள்ளியின் 23ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

மதர் இந்தியா மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் திருவாரூர் மாவட்டம் மாங்குடி பகுதியை சேர்ந்த சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகருமான திரு. தீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வின் போது பள்ளியின் தாளாளர் திரு. V.R.N. பன்னீர் செல்வம் தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார்.

கொரடாச்சேரி, அத்திக்கடை, பொதக்குடி, கூத்தாநல்லூர், அபிவை, பூதமங்கலம் போன்ற ஊர் முக்கியஸ்தர்களும், ஜமாத்தார்களும், பொதுமக்களும், முன்னாள் மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் பெருந்திரளாக வந்திருந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

இவ்விழாவின் போது மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இறுதியாக பள்ளியின் தலைமையாசிரியர் திரு. M.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.