துறையூர் ஏப்-04
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜா இளங்கோவன் (04-04-2026) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் சரோஜா இளங்கோவன் தனது ஆதரவாளர்களுடன் சிலோன் ஆபீஸ் பகுதியில் இருந்து ஆஸ்பத்திரி ரோடு, திருச்சி ரோடு வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் துறையூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பொது தேர்தல் பார்வையாளர் பிஜய் குமார் தாஸ், துணை தேர்தல் நடத்தும் அலுவலர் வட்டாட்சியர் சிவகுமார், தேர்தல் வட்டாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சரோஜா,முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, அதிமுக நகர செயலாளர் அமைதி பாலு, ஒன்றிய செயலாளர்கள் பொன் காமராஜ்,வெங்கடேசன், செல்வராஜ், நகர அவைத் தலைவர் ரவிவர்மா நகர்மன்ற உறுப்பினர் தீனதயாளன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கவிதை மணி, வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி மருதமுத்து,அமமுக பீரங்கி சுப்ரமணியன், ஐஜேகே பாஸ்கர், பாஜக ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், ராமசாமி, இளைஞர் அணி விவேக், விவசாய அணி விஜயரங்கன், ஐடி விங் தினேஷ், கணேஷ் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாமக, தமாகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
