திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மற்றும் மேஜிக் பஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் 2026 -ஐ கல்லூரி வளாகத்தில் நடத்தினர். இந்த நிகழ்விற்கு கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் முனைவர் வான்மதி செல்வி வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் சி.ருக்மணி தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் மு.ரமணன், செயலாளர் பிரியா ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த வேலை வாய்ப்பு முகாமில் 12க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து வந்த மனித வள மேலாளர்கள் நேர்காணலை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் பயிலும் இளநிலை, முதுநிலை இறுதி ஆண்டு மாணவிகள் 805 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான தற்காலிக பணி நியமன ஆணைகளை கல்லூரி தலைவர் மு.ரமணன், முதல்வர் முனைவர் சி.ருக்மணி ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வில் மேஜிக் பஸ் இந்தியா நிறுவன அதிகாரிகள் உடன் பங்கேற்றனர். இறுதியில் கல்லூரி ஆங்கிலத் துறை உதவி பேராசிரியை செல்வி சுபஸ்ரீ நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.