வேப்பூர் மார் – 14

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் நல்லூர் ஒன்றியத்தில் புதியதாக கட்டபட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்கள் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகிய கட்டிடங்களை திறந்து வைத்தார்

நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அருகிலுள்ள காட்டுமைலூர் ஊராட்சியில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து சேப்பாக்கம் ஊராட்சியில் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அவர் திறந்து வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார்

இதேபோல, சாத்தியம் ஊராட்சியில் ரூ. 29 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தையும் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வுக்கு நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிஊ) கொளஞ்சி, பெரியநாயகம் (ரெகுலர்) ஒன்றிய பொறியாளர்கள் குணசேகரன், சுமதி
ஊராட்சி செயலர்கள் சேப்பாக்கம் தங்க. சரவணன், சாத்தியம் செந்தில்குமார், காட்டுமைலூர் கொளஞ்சி, கீழக்குறிச்சி வீரமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழக்குறிச்சி முருகேசன், காட்டுமைலூர் மகேஸ்வரி, சாத்தியம் வெங்கடேசன் மற்றும் சேப்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலாளர் பழனி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் முருகானந்தம், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.