காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான,நலத்திட்ட உதவிகள்,புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா,முடிவுற்ற பணிகள் திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுதாகர் ஏற்பாட்டில்,தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்றது.

மாண்புமிகு குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், லூமெக்ஸ் தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகள், ஆகியோர் கலந்துகொண்டு,1 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளங்கள் அமைப்பதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.

லூமேக்ஸ் தொழிற்சாலை மூலம் 13 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
புதிய உடற்பயிற்சி கூடம் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணிகளை துவக்கி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து 13 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

விழாவில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுதாகர், ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி கணேஷ் பாபு, பண்ருட்டி தணிகாசலம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் குமார், உள்ளிட்ட திருபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட, உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்