ஓசூர் மார்ச் 3

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் தேர்த்திருவிழா மார்ச் 3 அன்று ஓசூரில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.
நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது இந்த ஆன்மிக நிகழ்வின் ஒரு பகுதியாக சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஓசூர் மாநகர கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழரசம் வழங்கும் நிகழ்ச்சி நமது கிளை அலுவலகம் அருகே பாகலூர் சாலையில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு மோர் மற்றும் பழரசம் நமது சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், நண்பர்களால் விநியோகிக்கப்பட்டது, இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர கமிட்டியின் தலைவர் பவுல்ட்ரி சோலைராஜ், செயலாளர் கிருபானந்தம், பொருளாளர் குருசாமி, கிளையின் ஒருங்கிணைப்பாளர் உமாசங்கர், நிர்வாக குழு உறுப்பினர் மஞ்சு, துணைத் தலைவர் சத்யநாதன், துணை செயலாளர் மை காபி வெங்கடேசன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு கேசிசி நகர் கார்த்திக், தொழிலதிபர் பிரகாஷ் ரெட்டி, அமரேஷ் ரெட்டி, நமது அமைப்பின் இளைஞரணி பொறுப்பாளர் தில்லை நகர் ராஜேஷ், செந்தில்நாதன், பழனி, சாமன், கோவிந்தராஜ் ஐயா, சரத், சட்ட உரிமைகள் பழக்கம் இன்டர்நேஷனல் அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஜி.பி.மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
