திருவாரூர்., பிப் 28
திருவாரூர் மின்சார வாரிய பொறியாளர் அலுவலகம் முன்புமின்சார வாரியத்தில் தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சேர்த்து ஒரே மாதிரியான ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய திருவாரூர் கூட்டு நடவடிக்கை குழுசார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழிலாளர்கள் அதிகாரிகள் என தங்களை பிரித்துத்து ஊதியம் வழங்கக்
கூடாது, சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
