கத்தாங்கண்ணி அருகே பள்ளி வேன் விபத்து – 7 மின்கம்பங்கள் சேதம், மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு

திருப்பூர் மாவட்டம் கத்தாங்கண்ணி அருகே இன்று காலை தேன்மலர் பள்ளி பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது.

சூரியநல்லூரைச் சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் இயக்கிய வேன், ருத்ராவதி முதல் ஜோதியம்பட்டி வழியாக கந்தகன்னி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியது.

அந்த நேரத்தில் வேனில் 5 பள்ளி மாணவர்கள், டிரைவர் மற்றும் கிளீனர் இருந்தனர். விபத்து ஏற்பட்டவுடன் அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் மொத்தம் 7 மின்கம்பங்கள் முழுவதுமாக சேதமடைந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.