குண்டடம் அருகே விவசாயத்துக்கு பயன்படும் ஆழியார் பழைய பாசன வாய்க்காலை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வலியுறுத்தி பாசன விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள பொடாரம்பாளையம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார்.

தனசேகர் தனக்கு சொந்தமான தோட்டத்தின் நடுவில் ஏழு சென்ட் பட்டா நிலத்து நடுவில் நீளமாக பாசன வாய்க்கால் அதாவது பிஏபி பாசன வாய்க்கால் சென்று வந்தது. அந்த பாசன வாய்க்காலை தனசேகர் தனது தோட்டத்தை சமன் செய்யும் போது பாசன வாய்க்காலை முற்றிலுமாக அளித்துவிட்டு பாசன வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்தி விட்டார்
பின்பு கோவை நெடுஞ்சாலை ஓரம் பட்டா இடத்தை ஒட்டியே சிறிய குழாய் அமைத்து தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்

இது தொடர்பாக பிஏபி பாசன விவசாயிகள் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பாசன வாய்க்காலை மீட்டுத் தர வலியுறுத்தி பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளிக்கும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் பிஏபி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திலிருந்து விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வதற்காக பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட உள்ளனர்.