கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குங்பூ போட்டி கேரளா,தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவையில் தமிழ்நாடு குங்பூ அசோசியேஷன் மற்றும் கோவை மாவட்ட குங்பூ சங்கம் ஆகியோர் இணைந்து தென்னிந்திய அளவிலான குங்பூ போட்டி அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர். கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது…

கோவையில் முதன் முறையாக நடைபெற்ற இதில் ,கேரளா,தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்…

சன்ஷு எனும் ஃபைட்டிங் மற்றும் தாலு எனும் கை பாடம் ஆகிய இரண்டு வகை போட்டிகளில் சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில் இரண்டு நாட்கள் போட்டிகள் நடைபெற்றன..

மூன்றரை வயது முதலான சிறுவர்கள் துவங்கி பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை நிரூபித்தனர் முன்னதாக நடைபெற்ற போட்டி துவக்க விழாவில்,அகில இந்திய குங்பூ சங்க செயலாளர் சரவணன்,தமிழ்நாடு சங்க செயலாளர் விஜயகுமார்,கோவை மாவட்ட செயலாளர் பாலமுரளி கிருஷ்ணன்,ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ஜெயவர்த்தன வேல் மற்றும் கே.பி.ஆர்.குழுமங்களின் தலைவர் ராமசாமி,செயலாளர் காயத்ரி ஆனந்த கிருஷ்ணன்,கல்லூரி முதல்வர் கீதா,தலைமை நிர்வாகி சேகர் மற்றும் தர்னேந்திரன்,தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்..

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்ய இருப்பதாக கோவை மாவட்ட குங்பூ சங்க செயலாளர் பாலமுரளி கிருஷ்ணன் தெரிவித்தார்…