கரூர் செய்தியாளர் மரியான் பாபு

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு..

கரூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் இரண்டாவது மாநில் மாநாடு கரூரில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். பொன்னையா தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
மாவட்டத் தலைவர் சுந்தர கணேசன் வரவேற்பு உரையாற்றினார்.

மாநிலத் தலைவர் முரளிதரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த போது மத்திய அரசு 2025 நாடாளுமன்றத்தில் 12 மணிக்கு ஒரு சட்டத்தை கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்படும் ஓய்வூதியம் ஊதியக்குழு பரிந்துரைக்கும் ஊதிய மாற்றத்தோடு ஏற்கனவே பெற்று வரும் ஓய்வு விதத்தில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டியதில்லை.என validation மசோதா இயற்றப்பட்டுள்ளது.


எட்டாவது ஊதிய குழுவில் ஓய்வூதியவர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்துவதால்
நீக்கப்பட்ட ஓய்வு பெறும் வயதினை மீண்டும் 58 ஆக குறைத்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் மாதத்தின் இடையில் மரணம் அடைந்தாலும் அவருக்கான அம்மாத முழு ஓய்வூதியத்தின் வழங்க வேண்டும்.


கலைஞர் ஆட்சியில் வாரிசு அடிப்படையில் 25 சதவீத பணி வழங்கியது.இன்றைய அரசு ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் 25 சதவீதமாக வாரிசு அடிப்படையில் பணி வழங்கப்பட வேண்டும்.தமிழ்நாட்டில் 1980 முதல் 1985 ஆண்டு வரை பணி நியமனம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உயிர் துவக்க ஊதியம் 14 ஆயிரத்து 940 தமிழ்நாடு அரசு வழங்கிட இந்த மாநாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.

என்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்ர் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.