தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 08.01.2025 அன்று விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளியில் பேண்டு வாத்தியக்குழு, என்.சி.சி தரைப்படை, சாரணர்படை, சாலை பாதுகாப்பு மாணவர் படை, செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமைப்படை, சேம்பியன்ஸ், ஐகான்ஸ், லெஜண்ட்ஸ் மற்றும் வாரியர்ஸ் மாணவ அணியினர் அணிவகுப்பு நடத்தினார். இவ்விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரகுகுமார் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றினார்.
இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 100 மீ, 800 மீ, 4 × 100 மீ தொடர் ஓட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேசிய தடகள விளையாட்டு வீரரும் பயிற்சியாளருமான Dr. நல்லுசாமி அன்னாவி பரிசளித்துப் பாராட்டினார்.
இசைக்குழு மாணவர்களின் இசைநிகழ்ச்சி, மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் வரவேற்பு நடனம், உழவர் நடனம், பென்குயின் நடனம், கர்பா நடனம், சிலம்பம், ஏரோபிக்ஸ், வெரைட்டி நடனம் மற்றும் வேல் ஆட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் சுப்ரமணியன், செயலாளர் பூபதி, அறக்கட்டளை உறுப்பினர்கள் கனகராஜ், நடராஜன், விஜயகுமார், முதல்வர் அல்லிராணி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
