ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட உப்பூரணி பகுதியில் உள்ள ரேஷன் கடையில்,நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு பொருள்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் பாத்திமாகனி,திமுக நகரச் செயலாளர் ஜாகிர்உசேன்,பேரூராட்சி துணைத் தலைவர் மாரி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருள்கள் முழு கரும்பு ஒன்று, பச்சரிசி, சர்க்கரை,மற்றும் ரூ.3000 வழங்கி துவக்கி வைத்தனர்.
