மேட்டுப்பாளையம் கே.ஜி டெனிம் லிமிட்டெட் மற்றும் கண்ணபிரான் மில்ஸ் குடும்பத்தாரின் நிர்வாகத்தில் உள்ள தென்திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலையில் ஸ்ரீ ஆதிவராகரப் பெருமாள் திருப்பள்ளி எழுச்சி, ஸ்ரீவாரி பெருமாள் திருப்பள்ளி எழுச்சி , விஸ்வரூப தரிசனம், தனுர் மாத தோமாலை , வில்வ அர்ச்சனை , துளசி அர்ச்சனை ஸ்ரீ மலையப்ப ஸ்ரீனிவாசர் ஸ்ரீதேவி பூதேவியுடன் மகா மண்டபம் எழுந்தருளல் மற்றும் சுவாமி புறப்பாடு அதைத்தொடர்ந்து அதிகாலை 4.30 மணி அளவில் திருவைகுண்ட வாசல் திறக்கப்பட்டு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமயதராய் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகஸ்தர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்