மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPATகளின் முதல் நிலைச் சரிபார்ப்பு (FLC) வெற்றிகரமாக நிறைவு.*

புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் – 2026 இற்காக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கைத் தடம் (VVPAT) அலகுகளின் முதல் நிலைச் சரிபார்ப்பு (First Level Checking – FLC) இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

2. இந்த சரிபார்ப்பு செயல்முறையின் போது மொத்தம் 2,844 வாக்குச் சாவடி அலகுகள் (Ballot Units – BU), 1,558 கட்டுப்பாட்டு அலகுகள் (Control Units – CU) மற்றும் 1,766 VVPAT அலகுகள் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டு, அனைத்தும் “சரி” (OK) என அறிவிக்கப்பட்டு, வரவிருக்கும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் – 2026 இற்குப் பயன்படுத்தத் தயாராக உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

3. மேற்கண்ட சரிபார்ப்பு செயல்முறையின் போது, 61 வாக்குச் சாவடி அலகுகள் (BU), 179 கட்டுப்பாட்டு அலகுகள் (CU) மற்றும் 258 VVPAT அலகுகள் “சரி இல்லை” (Not OK) எனக் கண்டறியப்பட்டன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, இச் சரியில்லாத இயந்திரங்கள் உற்பத்தியாளர் நிறுவனமான M/s. Bharat Electronics Limited (BEL) நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தேவையான செயல்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

4. இந்த முழு FLC செயல்முறை, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின் படி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இன்று 17.12.2025 அன்று நடத்தப்பட்டது.

5. முதல் நிலைச் சரிபார்ப்பு (FLC) நிறைவடைந்ததையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT அலகுகள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டு (Sealing), தேர்தல் துறையின் EVM களஞ்சியத்தில் (Warehouse) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இக் களஞ்சியம், ஒரு பிரிவு ஆயுதம் தாங்கிய காவல் படையினரால் 24 x 7 அடிப்படையில் கடுமையான பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

6. இந்த நடவடிக்கை, வரவிருக்கும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் (GEPLA)–2026 ஐ சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்காக மாவட்டத் தேர்தல் அலுவலகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது- குலோத்துங்கன்

(மாவட்டத் தேர்தல் அதிகாரி). M