புதுவையில் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்த மகளிர் மத்தியில் R .L . வெங்கட்ராமன் பேச்சு.!!!.

புதுச்சேரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து இரு நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்கள் ஆ எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இதற்கான இணைப்பு விழா கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திருமதி. கோமதி சங்கர் தலைமை தாங்கினார். திரு. N. சிவகுமாரன் அவர்கள் கூட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் S.R.சிவகுமார், J.சுப்ரமணியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில தலைவர் R .L. வெங்கட்ராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசியதாவது.

புதுவை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களுக்கான ஒரு ஆட்சியை உருவாக்க வில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது கட்சி, குடும்பம் மட்டும்தான் பயன் பெறுகிறது. மற்ற கட்சிகள் உத்தமர்கள் போல் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து மக்களுக்காக பாடுபடுவது போல் போராட்டம் ஆர்ப்பாட்டம் போன்று செயல் பட்டு விட்டு தேர்தல் வர ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்து பணம், பரிசு பொருட்களை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.

பிறகு ஆட்சி செய்தவர்கள் எதிர்க்கட்சியாகவும் மக்களுக்காக போராட்டம் நடத்தியவர்கள் ஆளும் கட்சியாகவும் வருவார்கள் . மீண்டும் தொடர்ந்து இதே நிலைதான் உருவாகுமே தவிர யாரும் மக்களுக்கான ஆட்சியை உருவாக்க தயாராக இல்லை. இதனை அரசியலில் 49 ஆண்டுகளாக ,7 முதல் அமைச்சர்களுடன் பயணித்தும் பார்த்தும் வருகிறேன்.

ஆகவேதான் ஊழலற்ற நேர்மையான ஜனநாயக ரீதியான மக்களுக்கான ஒரு ஆட்சியை உருவாக்க ஒரு பெண் முதல் அமைச்சர் தலைமையில் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சி புதுச்சேரி மக்களுக்கானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை 70 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்தவர்களால் புதுச்சேரி மாநிலத்தில் மக்களின் வாழ்வாதாரமாக இருந்த ஐந்து மில்களை மூடியது, இந்தியாவில் ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றியது, இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் குப்பைக்கு வரி போட்டது, சாதாரண மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் டீசல் விலையேற்றம், காமராஜர் ஆட்சி என்று கூறி கொண்டு பெண்கள் குடிக்க லஞ்சம் பெற்று ரெஸ்டோ பார் ஆரம்பிக்க அனுமதி கொடுத்தது, கல்வியில் சி பி எஸ் பாடத்திட்டத்தை புகுத்தி சாதாரண மக்களின் பிள்ளைகளின் படிப்பை பாழாக்கியது , மின்கட்டணத்தை உயர்த்தி கந்து வட்டி போன்று பல சேவை வரிகளை திணித்து சாதாரண மக்களை வஞ்சித்தது, புதுவையில் தொழிற்சாலைகளை மூடி வேலையில்லா திட்டத்தை ஏற்படுத்தியது, அனைத்து துறைகளிலும் ஊழல் , உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் தனது அதிகாரம் போய்விடக்கூடாது என்பதற்காக மக்களை ஏமாற்றியது, லஞ்சம் பெற்று மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்ததினால் நிலத்தடி நீர் குறைந்து முழுமையாக பாதித்து பல உயிர்கள் பறிபோனது இந்த ஆட்சியாளர்களால் தான் என்பதை யாரும் மறந்து விடமுடியாது. இவையெல்லாம் மாற்றப்படவேண்டும் என்றால் உங்கள் கையில் இருக்கும் ஒட்டு என்கிற ஆயுதம் தான்.

புதுச்சேரியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகம். ஆனால் பெண்கள் அரசியல் அதிகாரத்திற்கு வரமுடியவில்லை. அதற்கு நீங்கள் தான் காரணம். பெண்கள் அதிகாரத்திற்கு வந்தால் தான் சாதாரண மக்களின் பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டு வர முடியும். அண்டை மாநில மான தமிழ்நாட்டில் பெண் முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்ததால் தான் சாதாரண மக்களும் சுபிட்சம் அடைந்தார்கள்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி நடப்பதால் தான் இன்றுவரை அந்த அம்மாவை எதிர்க்கட்சிகள் வீழ்த்த முடியவில்லை. ஆகவேதான் புதுவையிலும் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைந்தால் மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள். ஆட்சியில் ஊழல் குறையும், மக்கள் நல திட்டங்கள் ஊழல் இல்லாமல் அனைத்தும் நிறைவேறும். நிதி ஆதாரம் பெருகும் . கடன் சுமை குறையும். டெல்லிக்கு சென்று எளிதாக மாநில அந்தஸ்து பெற்று தருவார்கள். ஒரு குடும்பத்தை பெண் நிர்வகித்தால் அந்த குடும்பம் எப்படி சுபிட்சம் அடையுமோ அதுபோல புதுச்சேரியை ஒரு பெண் முதல்வராக வந்து ஆட்சி செய்தால் புதுவை வளர்ச்சி பெரும் . ஆகவேதான் புதுவையிலும் ஒரு பெண் முதல்வராக வர நாம் அனைவரும் ஒன்று கூடி உழைத்து ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அதற்கு ஆ எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் R L வெங்கட்ராமன் பேசினார்.

முடிவில் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமதி . கவிதா நன்றி கூறினார்.