காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள்.
காங்கயம்,சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் காங்கயத்தில் அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில், டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் காங்கயம் கிளை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், அந்த அமைப்பின் காங்கயம் நிர்வாகிகளான ப.கண்ணுசாமி, கவி மற்றும் தமிழ்ப்புலிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பின் காங்கயம் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு, அம்பேத்கர் குறித்து உரையாற்றினர். இதில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
