சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி குன்றி மலை கிராமத்தில் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கடம்பூர் தனி பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது குன்றி ஜோசப் தொட்டியைச் சேர்ந்த சேசுராஜ் (36) என்பவர் குடிசையில் இருந்த 2 நாட்டு துப்பாக்கி சுமார் 10 லிட்டர் சாராய ஊற லை போலீசார் கைப்பற்றினர்
இதேபோல் குன்றி மாரியம்மன் கோவில் பகுதி சேர்ந்த அருள் தாஸ்( 33) என்பவரிடம் 1 நாட்டு துப்பாக்கி குன்றி நாயகன் தொட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார் (27) என்பவரிடம் 2 நாட்டு துப்பாக்கி இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்
இது தொடர்பாக கடம்பூர் போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 5 நாட்டு துப்பாக்கி சுமார் 10 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
