திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட உயிரினங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் கடத்திவரப்பட்டது இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்திற்கு குறைந்த அளவிலான தங்கம் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யும் போது அதற்கான சுங்கவரியினை செலுத்திவிட்டு பயணிகள் வாங்கிச் செல்லும் நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமைகளை கடத்தி வருவதை கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையில் அதில் 2477 ஆமைகள் இருந்ததும் தெரிய வந்தது இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருச்சி செய்தியாளர் அருள் மோகன்