கும்பகோணம் பி என் ஐ கிரவுன் சாப்டர், லைன்ஸ் கிளப் ஆஃப் குடந்தை கிங்ஸ் , மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் ஹெரிடேஜ், சி எஸ் சி கணினி மையம் ,,ஆகிய இணைந்து நடத்தும் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது
முகாமை விநாயக பல் சிகிச்சையகம், டாக்டர்.விக்னேஷ் பிரகாசம் தலைமை தாங்கினார்.லயன்ஸ் கிளப் ஆஃப் ஹெரிடேஜ் சங்கத் தலைவர் அறிவானந்தம்,
சி எஸ் சி லயன் ஆனந்தகுமார்,ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.குடந்தை கிங்ஸ் லயன்ஸ் கிளப் ,தலைவர் அன்பரசன் வரவேற்றார்.
ரெட் கிராஸ் ரொசாரியோ .முகாமை துவக்கி வைத்தார் அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் சுகந்தி தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர். 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.
ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு, பழ ஜூஸ் மற்றும் நினைவு பரிசு, பாராட்டுச சான்றிதழை மாவட்ட ஆளுநர் வழங்கினார். நிறைவில் லயன்ஸ் ராமதாஸ்,ஷேக் தாவூத் ஆகியோர் நன்றி கூறினார்கள்.
