திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பெற்றது.இம்முகாம் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற இச்சிறப்பு முகாமின் 6ம் நாள் நிகழ்வாக, பொந்துபுளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளி வளாகத் தூய்மையை மேற்கொள்ளுதல், ஆகிய பணிகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாநிலத் திட்ட அலுவலர் சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ம.சுதா வரவேற்றார். பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் முத்துராம் ,மற்றும் ஆசிரியர்கள் ராமர் ,ராம செல்வம் ,சித்த நாதன் , நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பழனி தங்க ரதம் லயன்ஸ் கிளப் சார்பில் பாபு அவர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கி சிறப்பு செய்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சாம்ராஜ் சேகர் ,பட்டதாரி ஆசிரியர் பாலாஜி மற்றும் ஆசிரியர்பயிற்றுனர் காளிமுத்து ஆகியோர் செய்து இருந்தனர்