திருவாரூரில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தி ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவ மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவை உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாணவ மாணவிகளிடம் தினசரி காலை உணவு தரம் எப்படி உள்ளது எனவும் கேட்டறிந்தார் .
தொடர்ந்து மாணவ மாணவிகள் மதிய உணவு அருந்தும் வகையில் போதிய இடம் இல்லாததால் சிரமம் உள்ளதாக தலைமை ஆசிரியர் ஜெயந்தி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார் .
குழந்தைகளின் பெற்றோரிடம் காலை உணவு திட்டம் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார் .
மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்துவதால் தங்களது குழந்தைகள் ஆர்வத்துடன் சாப்பிடுவதாக பெற்றோர் தெரிவித்தனர்.
