ஈரோடு:
2024 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியானது, ‘வாக்குத் திருட்டு’ மூலம் பெற்றது, இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது என குற்றம் சாட்டி, இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பீகாரில் நடத்திய ‘வாக்காளர் உரிமைப் பேரணி’ நாடு முழுவதும் கவனம் பெற்றது.
ராகுல் காந்தியின் இந்தக் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சேவா தளம் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. ‘Vote chori’ (வாக்குத் திருட்டு) செய்ததாகக் கூறப்படும் பாசிச பாஜக மோடி அரசையும், இதற்குத் துணை போன இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து, ஈரோடு மாநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2500 வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இது தொடர்பாகக் கையெழுத்துப் பிரதிகள் பெறப்பட்டன.
கையெழுத்து மனுக் கையளிப்பு:
முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கையெழுத்துப் பிரதிகள், இன்று (28.10.2025) காலை சரியாக 11.50 மணியளவில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. திருச்செல்வம் அவர்களிடம் முறைப்படி ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சேவா தளம் தலைவர் எஸ்.முகமது யூசுப் ஒப்படைத்தார்.
வாக்காளர்களின் உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான அக்கறையை இந்தப் பிரதிகள் வெளிப்படுத்துவதாகக் கட்சித் தொண்டர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்:
இந்தச் சிறப்பு வாய்ந்த நிகழ்வில், சேவா தளத்தின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில முதன்மைத் தலைவர் எம் ஜவஹர் அலி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணி தலைவர் சி மாரிமுத்து, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரசன்னா, கருங்கல்பாளையம் பத்ரிநாத், ராஜாஜிபுரம் கலைச்செல்வன், பவானி காங்கிரஸ் விஜய் மற்றும் சேவாதளம் மாவட்ட துணைத் தலைவர் ராஜாஜிபுரம் பி. குமரேசன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சேவா தளத்தின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை, ஈரோடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள சாதாரண வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்க காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது என்பதையும் அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
