கமுதி அருகே பெருநாழியில் உள்ள க்ஷத்திரிய இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி அரசு
உதவி பெறும் பள்ளியாகும். இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் விழா நேற்று நடைபெற்றது கடந்த 1982 – 83-ம் ஆண்டில் படித்த மாணவ, மாணவியர் தற்போது 42 வருடங்களுக்கு பிறகு இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் தாங்கள் படித்த இப்பள்ளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மினரல் வாட்டர் பிளாண்ட் அமைத்துக் கொடுத்தனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ் விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இளமாறன் தலைமை தாங்கினார்.பெருநாழி
காவல் ஆய்வாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்து, மினரல் வாட்டர் பிளாண்ட் இயக்கத்தை துவக்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது