துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பிரசன்ன மஹாலில் முருகூர், கொட்டையூர் ஊராட்சிகளுக்கு அக்டோபர் 22 ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேரு தலைமை தாங்கி துவக்கி வைத்து இலவச பட்டா மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்.இம்முகாமில் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், வட்டாட்சியர் சிவக்குமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் முருகூர், கொட்டையூர் ஆகிய ஊராட்சியில் உள்ள கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.இதில் 15 அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், அண்ணாதுரை,சிவ சரவணன்,முத்து செல்வன், அசோகன்,முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ்,
கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், பொது குழு உறுப்பினர் கிட்டப்பா, மாணவரணி பிரபாகரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ஆனந்த், மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலா, துரைராஜ், வருவாய் ஆய்வாளர்கள் இளவரசி , ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் டாக்டர் செந்தில்குமார், ஊராட்சி செயலர்கள் பிச்சமுத்து, செல்வராசு, மாலதி , சங்கீதா மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் செல்வராசு, பிச்சமுத்து செய்திருந்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்