திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை உலக  பிரசித்தி பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் ஒலியுல்லா  தர்காவில் 724வது ஆண்டு பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி  வெகு விமர்சையாக நடைபெற்றது

தொடர்ந்து தர்காவில் புனித கொடிக்கு துவாக்கள் ஓதப்பட்டு வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட  புனித கொடி பல்லக்கு ஊர்வலம் தர்காவிலிருந்து புறப்பட்டு
ஆசாத் நகர் முத்துப்பேட்டை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வலம் வந்த பின்னர் மீண்டும் தர்காவை அடைந்தது .

தொடர்ந்து 95 அடி உயரமுள்ள கொடிமரத்தில் புனித கொடி ஏற்றப்பட்டது இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜாதி மதமின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர்.

இந்த கொடியேற்ற விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

14 நாட்கள் திருவிழாவை தொடர்ந்து வரும்  1.11.25 தேதி சனிக்கிழமை அன்று அதிகாலை 2.30 மணிக்கு சந்தக்னகூடு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.