திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஆறங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மகன் லோகேஷ் வயது 12 இவர் புறநகர் ரயில் மூலம் பொன்னேரியில் இருந்து வழி தவறி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று அந்தப் பகுதியில் சுற்றி திரிந்த வரை ஆட்டோ ஓட்டுனர் அழித்து விசாரித்ததில் அவர் எண்ணூர் எர்ணாவூர் குப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதற்கு பதில் வழி தவறி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்ததாக கூறியதை யடுத்து ஆட்டோ ஓட்டுனர் எண்ணூர் காவல் நிலைய போலீசாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து எண்ணூர் போலீசார் இந்த சிறுவனை ஆட்டோவில் அழைத்து வரச் சொல்லி காவல் நிலையத்தில் கொண்டு வந்த நிலையில் அவனை அழைத்துச் சென்று இன்னொரு போலீசார் எர்ணாவூர் குப்பத்தில் பாட்டி வீட்டை அடையாளம் காட்டுவதற்காக அழைத்துச் சென்ற நிலையில் இடம் தெரியாமல் தவித்த நிலையில் அவர்களது பாட்டி தாத்தா பெயரை வைத்து கண்டுபிடித்து சிறுவனை பாட்டியிடம் பத்திரமாக ஒப்படைத்த எண்ணூர் போலீசார்

தனது பேரனை பத்திரமாக மீட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் எண்ணூர் காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்