அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூர் ஜவுளி கடையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து அரியலூர் கடை வீதியில் சண்முகம் என்பவர் சண்முகா ஜவுளி ஸ்டோர்ஸ் என்ற பெயருடன் கடை நடத்தி வருகிறார்

அந்தப் பகுதியில் இரவு ரோந்து வந்த போலீசார் கடையில் புகை வருவதை கண்டு அருகில் சென்று பார்த்த போது தீப்பற்றி எரிவது தெரியவந்தது இரண்டு தளங்கள் உள்ள ஜவுளிக்கடையில் கீழ் தளத்திலிருந்த துணிகள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது தீபாவளி அன்று விற்பனை செய்த ரூபாய் 3 லட்சம் பணம் எரிந்து சாம்பல் ஆனது மற்றும் பல லட்சம் மதிப்பிலான துணிகள் மின்சாதனங்கள் முற்றிலும் எரிந்தது மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன