மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் கே. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், தோமாலை, ஆர்த்தி, 1008 நாமாவளி அர்ச்சனை ஆகிய வைபவங்கள் நடைபெற்றது. மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீமலையப்ப சுவாமி தங்கரதத்தில் எழுந்தருளினார்.

மங்கள வாத்தியங்கள் இசைக்க பக்தர்கள் அரோகரா கோஷத்துடன்
தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கிழக்கு ரத வீதியில் பெருமாளுக்கு முன்பாக வான வேடிக்கை நடைபெற்றது. பின்னர் தேர் நான்கு மாட வீதிகளின் வழியாக வளம் வந்து நிலை சேர்ந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.