நாமக்கல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பால் விலையை உயர்த்தக் கோரி இன்று தமிழகம முழுவதும் நடைபெறவிருந்த போராட்டம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம் கொள்முதல் செய்யும் பசும்பால் மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு தற்போதைய விலையில் இருந்து ரூ.15/- உயர்த்தி வழங்காததை கண்டித்து 22.10.2025 இன்று காலை முதல் ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் சப்பளையை நிறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் போராட்டம் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்க அமைப்புகளும், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைமையில் ஒருங்கிணைந்து கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக்கடலில் புதிய காற்றுழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன்பேரிலும், கனமழையின் காரணமாகவும் நாளை காலை தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த போராட்டம் தற்சமயம் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் குறித்து பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.